சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அரசன் அசோகனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் கூட்டாக பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு

சிவகாசி சட்டமன்ற தொகு தியில் கடந்த 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி தந்து விட்டு மீண்டும் தனக்கு வாக்கு கேட்டு அசோகன் வந்துள்ளார். அவருக்கு நீங்கள்
அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதிக நிதி
இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக அவர் சட்டமன்றத் தில் பேசும் போது நான் அருகில் இருந்து இருக்கிறேன். அசோகன் கேட்கும் திட்டங் களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் செய்து கொடுத்துள்ளார். தி.மு.க. ஆட்சியில்தான் சிவகாசி தொகுதிக்கு எப்போதும் இல்லாதவகையில் அதிக நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கி தந்துள்ளார்.
சிவகாசியை ஸ்மார்ட் சிட்டி என்று அசோகர் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். இதுபோன்று வளர்ச்சி பணி இந்த நகருக்கு வர ஒரு சிறந்த எம். எல்.ஏ தொகுதிக்கு வேண்டும். அது அரசன் அசோனாக இருந்தால் அந்த வளர்ச்சி பணிகள் விரைந்து
நடைபெறும். ஆதலால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பி ராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது மாணிக்கம் தாகூர் எம்.பி.. காங்கிரஸ் வேட்பாளர் அரோகன், மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக் னேஷ்பிரியா காளிராஜன், தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர் திருத்தங்கல் சக்தி வேல், ஒன்றிய செயலாளர் விவேகன்கன் ராஜ், பகுதி செய லாளர் அ.செல்வம், காளிரா ஜன், கவுன்சிலர் சேதுராமன், ராஜேஷ், செந்தில் அரசு ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட நிர்வாகி தங்கராஜ் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். 200 பேருடன் அவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



