• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வெங்கடாசலபதி திருக்கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா..,

ByK Kaliraj

Jun 22, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு எங்கள் திருக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவ பெருந்திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இன்று ஆணில் பிரமோற்சவ பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது .

10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ பெருந்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் தினமும் வெங்கடாசலபதி உற்சவர் ஜடாயு, கருட வாகனம், அன்ன வாகனம், குதிரை, கஜவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 4 ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

இன்று அதிகாலையில் சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோவிலில் வீற்றிருக்கும் சாத்தூரப்பன் என்று அழைக்கப்படும் உற்சவம் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது யாக பூஜைகளும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோவில் முகப்பில் உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடியானது ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருத்தேர் எடுக்கும் பணியில் ஈடுபடும் சடையம்பட்டி அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனும் கோஷம் எழுப்பி வெங்கடாசலபதியை வணங்கினர்.