• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Apr 18, 2026

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்வதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் கோட்டையூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கி தாயில்பட்டி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியின் வழியாக மேலத்தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம் வரை ஊர்வலமாக சென்றனர்.