• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தற்கொலை..,

ByK Kaliraj

Apr 18, 2026

சிவகாசி அருகே உள்ள வெற்றிலை யூரணி ஊராட்சி ஆர்.சி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35 ) பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சரியாக செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும் எப்போதும் மது போதையில் இருந்ததால் மனைவி பாண்டிச்செல்வி (வயது 30) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் மனைவி பாண்டிச்செல்வி கணவருடன் பேசாமல் வீட்டின் ஒரு பகுதியில் தனியாக இருந்துள்ளார். மனைவி தன்னுடன் பேசாமல் இருந்ததால் மன வேதனையில் இருந்தவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார். என்னைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.