• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பயந்து அதிமுக வில் உட்கட்சி தேர்தல் நடத்துவதாக அமமுக கழக அமைப்பு செயலாளர் எஸ் கே செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு….

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் சேலம் மாவட்டத்தை மறுசீரமைப்பு செய்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிப்பை வெளியிட்டார்

அதன்படி சேலம் மத்திய மாவட்ட செயலாளராக கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ் கே செல்வம் சேலம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே கே மாதேஸ்வரன் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே சண்முகம் சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி சங்கர் அவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் சேலம் 4ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா மணி மண்டபத்திற்கு கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு கழகத்தினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ் கே செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள்என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் என்பது அமமுக வுக்கு பயந்தே நடத்தப்படுவதாகவும் அந்த தேர்தலில் ஜனநாயகமில்லை என்றும் அடிமட்ட தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

அமமுகவில் தற்போது சசிகலா இல்லை என்று தெரிவித்த எஸ் கே செல்வம் தற்போதைய சூழ்நிலையில் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தான் என்றும் தெரிவித்தார் சசிகலாவை ஓபிஎஸ் ஏற்றுகொள்ளும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் ஏற்காததற்க்கு காரணம் அவர் செய்த துரோகம் அவர் மனதை உருக்கும் தாகவும் அதனால் அவர் சசிகலா வருகையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.