விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் .

மேலும் மதிச்செல்வம் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அச்சங் குளம் பகுதியை சேர்ந்த உறவினரின் மொட்டை போடும் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளனர்.
இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவரது மகன் ராஜபாண்டி (24) என்பவரின் செல்போன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெம்பக்கோட்டை யில் உள்ள மதுபான கடையில் நேற்று இரவு மதிச்செல்வம் மற்றும் ராஜபாண்டி மற்றும் அவருடைய சகோதரர் குருபாண்டி மற்றும் குருபாண்டியின் நண்பர்கள் ஆன பந்துவார்பட்டி பகுதியை சேர்ந்த மனோஜ் மற்றும் நவீன் ஆகியோருடன் சேந்து மது அருந்தி உள்ளனர்.
இந்த நிலையில் வெம்பக்கோட்டை மதுபான கடையில் வைத்து மதிசெல்வத்திடம் ராஜபாண்டி மற்றும் அவருடைய சகோதரர் காணாமல் போன செல்போன் குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் அச்சங்குளத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே வைத்து மீண்டும் காணாமல் போன செல்போன் குறித்து ராஜபாண்டி மற்றும் சகோதரர் உள்ளிட்ட நான்கு பேர் மதி செல்வத்திடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜபாண்டி உள்பட நான்கு பேரும் மதிசெல்வத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் தாக்குதலில் படுகாயம் அடைந்த மதி செல்வம் வீட்டிற்கு சென்ற உடன் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் மதி செல்வத்தின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து மதி செல்வத்தை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




