• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட1 லட்சத்து 22940 பணம் பறிமுதல்..,

ByRadhakrishnan Thangaraj

Mar 24, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் நேற்று இரவு (SST )தேர்தல் கண்காணிப்பு குழு வாகன சோதனை ஈடுபட்ட பொழுது சங்கரன்கோவில் சாலை தனியார் கல்லூரி அருகே மினி லாரியில் பலசரக்கு வியாபாரம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள,

தைக்க தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் மாரிமுத்து உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த 1 லட்சத்து 22940 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூபதி.சிறப்பு சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்த பணத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.