• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களின் திறமை திருவிழாவில் கே டி ஆர் பங்கேற்பு..,

ByK Kaliraj

Aug 21, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை ஊக்குவிப்பதற்காக திறமை திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு மாணவப் பருவம் முக்கியமானதாகும். தற்போது உள்ள உலகம் போட்டி நிறைந்தது ஆகும். ஆகையால் மாணவ மாணவிகள் தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் வெற்றி பெற அடித்தளமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ,ஓவிய போட்டி, மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பரதநாட்டியம், சிவ தாண்டவம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் யூத் பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.