• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ரமலான் சிறப்பு தொழுகையில் அன்பை பரிமாறிய இஸ்லாமியர்கள்..,

BySubeshchandrabose

Mar 21, 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவசல்கள் உள்ளன.

இந்த பள்ளிவாசல்களின் கூட்டமைபின் சார்பாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் தண்டுபாளையம் காந்தி சிலை அக்ரஹாரம் வள்ளுவர் சிலை உழவர் சந்தை சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று அழகர்சாமிபுரம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தொழுகை மைதானமான ஈதுகா மைதானத்தில் ஒன்று கூடி நடைபெற்ற ரமலான் பண்டிகையின் ஈதல் சிறப்பு தொழுகையில் 5000த்திற்க்கும் மேற்பட்ட பங்கேற்றனர்.

மேலும் ரமலான் மாதத்தில் நோன்பு இறுந்த பெரியவர்கள் முதல் சிருவர்கள் என அனைவரும் புத்தாடை உடுத்தி நடைபெற்ற சிறப்பு தொழுகைக்கு பின் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.