• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

துணி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!!

வேடசந்தூர், மார்ச்.21-சேலத்தில் இருந்து மதுரைக்கு ஜவுளி கடைக்கு துணிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை வீராச்சாமி (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார்.

லாரி, இன்று காலை கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அடுத்துள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று நான்கு வழிச்சாலையில் சென்று மீடியாவில் கவிழ்ந்தது.

சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்து லேசான காயம் அடைந்த லாரி டிரைவர்
வீராச்சாமியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு வருகின்றனர்.

இந்த விபத்தால் கரூர் திண்டுக்கல் நான்கு வழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பார்த்தது.