சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 100 நாள் வேலை செய்பவர்களுக்கு கருவிழி எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் பல நாட்கள் 100 நாள் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் ரோடு மறியல் ஈடுபட வந்தனர்.

தகவல் அறிந்து காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட வந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.




