• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jul 26, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் 22 பயனாளிகளுக்கு ரூபாய் 14 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி வீடுகள் கட்ட ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை தாசில்தார் ஆண்டாள், கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் ,உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். 22 பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது இலவச வீட்டு மனைக்காக விண்ணப்பம் தள்ளுபடி ஆன மல்லிகா தனக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கலெக்டரின் காலில் விழுந்தார். அருகில் இருந்த அதிகாரிகள் உடனடியாக சமாதானம் செய்து வெளியேற்ற முயன்ற போது மல்லிகா திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.