• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காடுபட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான எறி பந்து போட்டிகள் வாடிப்பட்டி தாய் பள்ளிமைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் முதலிடமும்,17 வயது பிரிவில் முதலிடமும்,மாணவிகள் 17 வயது பிரிவில் முதலிடமும்,14 வயது பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர்.

மேலும் வளைய பந்து இரட்டையர் பிரிவில் 19 வயது பிரிவில் முதலிடமும் ,14 வயது பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர். இதில்வெற்றி பெற்றசாதனை மாணவ, மாணவிகளை மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி சந்திரமோகன் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார், உதவி தலைமை ஆசிரியர் ராஜலக்ஷ்மிமற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.