சோழவந்தான் இதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இரவு ஆலம் கட்டி மழை பலத்த காற்றுடன் பெய்தது. இதனால் சோழவந்தான் அதனை சுற்றியுள்ள பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் கம்பம் சேதம் மின்தடை ஏற்பட்டது.

வணிக கட்டடத்தில் உள்ள போர்டுகள் காற்றில் பறந்து சேதமடைந்தது. பேட்டை பகுதி, ரயில்வே பீடர் ரோடு, வெள்ளப் பிள்ளையார் கோவில், அரசு பஸ் டிப்போ முன்பு, திருவேடகம் பகுதியில் பலத்த காற்றுக்கு மரங்கள் வேருடன் சாய்ந்து மின் வயரில் விழுந்தது. சில இடங்களில் மின் கம்பம் சேதம் அடைந்தது. இதனால் மின்சாரம் தடை பெற்றது.
சோழவந்தானில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்தது. அடாத மழையிலும் பொதுமக்கள் ஆலங்கட்டிகளை பொறுக்கி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவேடகம், மேலக்கால், தென்கரை, முள்ளிப்பள்ளம், விக்கிரமங்கலம், உள்பட இப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குருவித்துறை கரட்டுப்பட்டி உள்பட இப்பகுதி கிராமங்களில் லேசான மழை பெய்தது.
இதனால் சோழவந்தான் பேட்டை குடிநீர் தொட்டிய அருகே விதைப்பண்ணை முதல் கரட்டுப்பட்டி வரை பல இடங்களில் மரங்கள் விழுந்து புரோட்டின் குறுக்கே கிடந்தது இதனால் போக்குவரத்து பெரிதும் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதியில் மரங்கள் விழுந்து மின்சாரம் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு சோழவந்தான் தீயணைப்பு படை மற்றும் மீட்பு குழுவினர் நிலையை அலுவலர் முத்துக்குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர், மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை அப்புறப்படுத்தினர். சோழவந்தான் காடுபட்டி மற்றும் விக்கிரமங்கலம் ஆகிய காவல் நிலைய போலீசார் பலத்த மழைக்கு ஆங்காங்கே மரம் முறிந்து ஒடிந்து மற்றும் வேரோடு சாய்ந்துள்ள மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட இடங்களில் போலீசார்சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
சம்பவ இடங்களுக்கு மின் உதவி இன்ஜினியர் கீர்த்திகா மற்றும் பணியாளர்கள் உட்பட தொழிலாளர்கள் மின் வயர் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி முடிந்து விழுந்த மின் கம்பத்தை இரவு நேரம் என்பதால் மாற்று வழியில் மின்சாரம் சில பகுதிக்கு கொடுத்தனர்.

பேட்டை மூக்கம்மாள் வீட்டில் மழை தண்ணீர் பூந்தது வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர். இதுபோல் இப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் வீடுகளிலும் மழை நீர் புகுந்தது.



