கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஜோதி தெரு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கல்பனா என்பவர் குப்பையில் கிடந்த 5 பவுன் தங்க நகையை கண்டுபிடித்தார்.
அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரிடம் ஒப்படைத்தார்.

இந்த நேர்மையை பாராட்டி மேயர் மகேஷ் சால்வை அணிவித்து ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். நகை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



