• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடியை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கன்னியாகுமரியில் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி திமுக செயலாளரும் நகராட்சி தலைவருமான குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் பி.டி. செல்வக்குமார், நாஞ்சில் மைக்கேல், முன்னாள் கவுன்சிலர் தாமஸ் நிசார், கவுன்சிலர்கள் இக்பால், பூகோல ராஜா, சகாய செர்ஜினால், ஜெனிட்டா மெல்பின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வில் புலிப்படம் தயாரிப்பாளரும். நடிகர் விஜய்யின் முன்னாள் உதவியாளருமான பி.டி.செல்வக்குமார் கண்டன உரையாற்றினார்.

மேலும் கட்சி நிர்வாகிகள் கேய்சர், தேமுதிக, மாநில நிர்வாகி சிவகுமார் நாகப்பன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவஹர், திமுக நிர்வாகிகள் அன்பழகன், மணிராஜா, எஸ்டிபிஐ கட்சியின் சாஹுல் ஹமீது, உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.