• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்..,

ByK Kaliraj

Mar 13, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் துவக்க விழாவை முன்னிட்டு சாத்தூரில் இருந்து இருக்கன்குடி வரை எட்டு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி நடைபெற்றது.

நடைபயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாத்தூர் இருக்கன்குடி சாலையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நடை பயிற்சியில் நகர் மன்ற தலைவர்,சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ்,சாத்தூர் டிஎஸ்பி குருசாமி, மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் பொதுமக்கள் பலருக்கும் சுகாதாரத் துறை சார்பில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.