• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கூலி தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு..,

BySubeshchandrabose

Mar 12, 2026

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன் பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் கூலி தொழிலாளியான சத்யா இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் சம்பவ நாளன்று தனது இரண்டு மகன்களுடன் தாயாரை பார்க்க மயிலாடும்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கண்டுகொண்ட மர்ம நபர்கள் இரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவின் கதவை உடைத்து அதில் இருந்த 8 கிராம் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதையடுத்து தாயார் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த சத்யா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் நகை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்

க.விலக்கு காவல்துறையினருக்கு சத்யா கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த க.விலக்கு காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.