உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர்.

26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால் சிறியவராக இருந்தாலும், சாதிப்பதில் பெரியவராக இருக்கிறார். அவர் தனது குறைபாட்டை பலமாக மாற்றி, உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளா. 3 அடி 4 அங்குலம் உயரமே உள்ள பிரதீக், தற்போது உலக சாதனையாளர். பாடி பில்டிங்கை தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்ட இந்த சாதனை மனிதர், தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றிவிட்டார்.

இதோபோல் குரோஷியாவைச் சேர்ந்த 56 வயது நபர் வித்தியாசமான உலக சாதனை படைத்துள்ளார். புத்மிர் சோபத் என்பவர், தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் மூச்சைப் பிடித்து இருந்து, உலக சாதனை படைத்துள்ளார். இந்த நபர் நீருக்கடியில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சை பிடித்தவாறு இருந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு தான் செய்த சாதனையையே அவர் முறியடித்துள்ளார்

ஜோ எல்லிஸ் என்ற பெண் வித்தியாசமான சாதனையை செய்து உலக சாதனை படைத்துள்ளார். நாக்கால் மின்விசிறியை நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோ, மின் விசிறியின் பிளேட்டை தனது நாக்கால் நிறுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, இந்த சாதனை படைத்துள்ளார்.
- சாரண சாரணியர் இயக்கம் 50 வது பொன்விழா..,

- கிராம தலைவராக கேபிள் ராஜா தேர்வு..,

- புதிய ஆறு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர்..,

- 30 ஆண்டு கால கனவு நிறைவேற்றம்..,

- விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் அவதி..,

- பழைய இரும்புக்கடையில் தீப்பற்றியதால் பதற்றம்..,

- நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

- 5 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..,

- மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி..,

- மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் திறப்புவிழா..,












; ?>)
; ?>)
; ?>)