• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா..,

BySeenu

Mar 5, 2026

தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிரம்மாண்ட அன்னதானம் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், கோவையின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் காட்டும் ஒரு விழாவாகக் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மதங்களை கடந்த மனிதநேயமாக, தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. பெரிய கடை வீதி ஜமேஷா தர்கா அருகில் நடைபெற்ற அன்னதான நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னதாக அன்னதான துவக்க விழாவில் தி.மு.க.தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்..

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் கிளாசிக் பூபதி,பொது செயலாளர் ரியாசுதீன்,,மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கோல்டு முஸ்தபா, கோல்டு அப்சல், கோல்டு தன்சில், யாசர், லைவ் அசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னதான விழாவில் சங்கத்தில் உள்ள இந்து, இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மதங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சாதி மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவுகளைப் பரிமாறினர். கோனியம்மன் தேர்த்திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.