மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் விருதுநகர் தேச பந்து மைதானத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு விருதுநகர் திமுக நகர செயலாளர் SRS தனபாலன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மாதவன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் பால கிருஷ்ணசாமி, மதிமுக துணை செயலாளர் லக்ஷ்மணன், சிபிஐ மற்றும் சி பி எம் மக்கள் நீதி மய்யம் , போன்ற அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் SRS தனபாலன் மத்திய அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பினார். மதிமுக நகர துனை செயலாளர் லட்சுமனன் பேசும்போது நகர செயலாளர் SRS தனபாலன் என்பதற்கு பதில் S R நாகராஜன் என்று கூறினார், கூட்டத்தில் இருந்தவர்கள் SR நாகராஜன் இறந்து பல வருடங்கள் ஆனாலும் இவர் மறக்கவில்லை போலும் என்று கூறினார்கள். மற்றொருவரோ இதேபோல ஏற்கனவே திமுக கண்டனக்கூட்டத்தில் எடப்பாடியார் ஆட்சி மலர்ந்தே தீரும் என்று கூறினார்கள் என்று சிரித்தவாறு சென்றார்.







