• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

அதிமுக கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

ByK Kaliraj

Feb 13, 2026

சாத்தூர் அருகே தாயில்பட்டியில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலையை வழங்காததற்கும் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காத பாஜக அரசை கண்டித்தும் மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

திமுக வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ஜெய பாண்டியன் மற்றும் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக , முக்குலத்தோர் புலிப்படை, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.