• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மறியல் போராட்டம்..,

ByVelmurugan .M

Feb 10, 2026

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை அண்டை மாநிலமான டில்லியில் 3000/- அரியனாவில் 3500/- தெலுங்கானாவில் 4016/- திரிபுர 5000/- புதுச்சேரி 4000/- முதல் 5700/- வரையும், ஆந்திராவில் 6000/- முதல் 15000/- வரை வழங்கப்படுகிறது.

அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி தொகையை உயர்த்திட வேண்டும் என கோரிக்கை கோஷமெழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 70 க்கும் மேற்பட்டோரை பெரம்பலூர் காவல்துறையினர் கைது செய்தனர் . இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.