மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நிலைய எடுப்பு தொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட 120 குடும்பங்களுக்கு உயர் நீதிமன்ற வழி காட்டுதல்படி மாற்று இடம் வழங்க வருவாய் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு பெருங்குடி பகுதியில் ரெண்டே கால் சென்ட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது அதனை தொடர்ந்து வருவாய் துறை சார்பில் மதுரை தெற்கு வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மண்டல துணை தாசில்தார் டெல்டா மதுரை விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் தாணு மூர்த்தி வருவாய் ஆய்வாளர் விமலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நில அளவையாளர்கள் உள்ளிட்டோர் இன்று சின்ன உடைப்பு கிராமத்தில் முதல் கட்டமாக 65 பேருக்கு பெருங்குடி கிராமத்தில் 2 கால் சென்ட் வழங்கும் நோட்டீசை வழங்கினர்.

இதற்கு பொதுமக்கள் தரப்பில் 2009 காலகட்டத்தில் ஒரு குடும்பமாக இருந்தது தற்பொழுது 4 குடும்பமாக உள்ளதால் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருப்பதால் நான்கு பேருக்கும் நிலம் வழங்கும் ஆறு கோரிக்கை விருந்தினர் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கையெழுத்து போட்டு மனுவினை பெற்றுக் கொண்டனர் .

இதனால் சின்ன உடைப்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேசி சமரச உடன்படிக்கையின் படி பொதுமக்கள் தற்காலிகமாக கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அது தொடர்பாக வர வாய்ப்பு துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர் .
விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான நிலங்களை ஒப்படைக்கக் கோரி அதிகாரிகள் தரப்பில் நோட்டிஸ் கொடுக்கப்பட்டாலும், கிராம மக்கள் தங்களுக்கு முறையான மறுகுடியமர்வு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதிப்பைத் தவிர்க்க பெருங்குடி காவல் ஆய்வாளர் கோபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் நில அளவீடு மற்றும் ஆவணப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.










