• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அண்ணா நினைவு நாளை ஒட்டி பொது விருந்து..,

ByKalamegam Viswanathan

Feb 3, 2026

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ள அருள்மிகு சித்திர ரதவல்லபபெருமாள் கோவிலில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது இதில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி பணியாளர்கள் நாகராஜ் மணி ஜனார்த்தனன் மற்றும் ஊராட்சி செயலாளர் மனோபாரதி
உள்பட பலர் கலந்து கொண்டனர்.