தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் உள்ள சுப்பு காலனியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை அமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் 50 லட்சம் ரூபாய் செலவில் சுப்புகாலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ரயில் ரோடு வரை தார்சாலை அமைக்க பேரூராட்சி உட்கட்டமைப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த தார்சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் தெருவில் உள்ள அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறு மற்றும் மின் மோட்டார் தொட்டி மற்றும் தெருவில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அப்பகுதி பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரமான தார் சாலை அமைத்து தரக் கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நீண்ட நாள் மக்கள் கோரிக்கையான தார்சாலையை சாலைக்கு நடுவே உள்ள மின் கம்பங்கள், ஆழ்துளைக்கிணறு மற்றும் மின்மோட்டார் மற்றும் செப்டிக் டேங்க் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான சாலையாக அமைத்து தரக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)