பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பத்து ஆண்டுகளுக்கான தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற முதல் கல்லூரி மற்றும் தேசியத் தர நிர்ணயக் குழுவின் மறுமதிப்பீட்டில் “அ++” சான்றிதழை 2024-ஆம் ஆண்டு பெற்று ஏழு வருடங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று எந்தக் கல்லூரிக்கும் கிடைக்காத பெருமைக்குரிய மகுடம் சூட்டுவதாய் அமைந்துள்ளது.

04.09.2025 அன்று வெளியிடப்பட்ட தேசிய தரவரிசைப் பட்டியலில் கல்லூரிகள் பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறந்த கல்லூரிக்கான 100 தரவரிசைக்குள், 2023-ஆம் ஆண்டு 74-வது இடத்தையும்; 2024-ஆம் ஆண்டு 44-வது இடத்தையும் 2025-ஆம் ஆண்டு 40-வது இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டு மாநில அளவில் 9-வது இடத்தையும் மாநில மகளிர் கல்லூரி அளவில் 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த சிறப்பு மிக்க சாதனை படைத்த முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்கள் பாராட்டி பேசிய பொழுது “பெண்கள் கல்வி பெற்று மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1996 ஆம்; ஆண்டு முதன் முதலாக பெரம்பலூரில் மகளிர் கல்லூரியை துவங்கி ஆலமரவிருட்சமாக வளர்ந்து இன்றுவரை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது. மாணவிகள்; அனைவரும் தோல்வி என்பதே இல்லாமல் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியை நோக்கிய பயணமாக இருக்கவேண்டும் என்றும் வாழ்த்தி மகிழ்ந்தார்.
மகளிர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா அவர்கள் வாழ்த்தும் போது உயர்கல்வியோடு நின்று விடாமல் ஆராய்ச்சிதுறையிலும் மகளிர் கல்லூரியானது ஏழு ஆராய்ச்சி துறைகளை துவங்கி 40 ஆராய்ச்சி மாணவர்களையும் கொண்டு ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கியூரி திட்டத்தின்; கீழ் ஒன்றரை கோடிரூபாய் 2024 ஆம்; ஆண்டு பெற்று பெரம்பலூர்; மாவட்டத்திற்கு சிறந்ததொரு அடையாளத்திற்கு காரணமாக ஆராய்ச்சியில் மேம்பட்டு விளங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொண்டார்.
மாணவிகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வியில் மேம்பட்டு விளங்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கல்லூரியின் தரம் உயர்ந்து கொண்டு செல்கிறது. 09.09.2025 இன்று மகளிர் கல்லூரி முதல்வர், அறக்கட்டளை உறுப்பினர்கள், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரையும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் ஐயா அவர்கள் கல்லூரியின் தேசியதர நிர்ணயக் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பேராசிரியர் உமாதேவிபொங்கியாஅவர்கள், ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபலட்சுமி அவர்களையும், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கணிதவியல் துறை, உதவிப்பேராசிரியர் கிருத்திகா, மற்றும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கீதா ஆகியோரை வேந்தர் அவர்கள் பாராட்டி இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.






; ?>)
; ?>)
; ?>)
