• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

செம்முனிஸ்வரர் கிடா வெட்டு மாட்டு வண்டி பந்தயம்.,

ByS. SRIDHAR

Aug 16, 2025

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கைகுறிச்சி ஸ்ரீ பொற்பனை செம் முனீஸ்வரர் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சாரதிகள் மற்றும் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டிற்கு போக வர எட்டு மைல் தூரமும் சிறிய மாட்டிற்கு போக வர ஆறு மைல் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

துள்ளி குதித்து ஒன்றை ஒன்று சீறிப்பாய்ந்து முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலைகளின் இரு புறங்களிடமிருந்து ஏராளமான பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் கண்டு ரசித்தனர். மேலும் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கும் ரொக்க பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.