• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில்இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் த மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவரது ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து பல்வேறு மாற்று கட்சிகள் சேர்ந்தவர்கள் தொடர்ந்து திமுக இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் .பாரத் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள், திமுக குமரி கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் மாவட்ட அவைத் தலைவர்ராஜரத்தினம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் ஜீவா மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.