• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தொட்டது

Byவிஷா

May 19, 2025

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 13-ம் தேதி (மே 13) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 8,855-க்கு விற்பனையானது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது. (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனையானது.
சென்னையில் இன்று (மே.19) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனையாகிறது.