• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சென்னை உள்ளகரம் 185ஆவது வார்டில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

ByE.Sathyamurthy

May 10, 2025

சென்னை உள்ளகரம் 185 ஆவது வார்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 185ஆவது மாமன்ற உறுப்பினர் சர்மிளா தேவி திவாகர், வட்டச் செயலாளர் திவாகர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகராட்சி ஊழியர்கள் மக்கள் குப்பைகளை எப்படி எல்லாம் பிரித்து போட வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று மக்களுக்கு விழிப்புணர்வு நாடகம் போல் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு கொடுத்து நாங்கள் குப்பைகளை தனியாக பிரித்து தருவோம் என்று உறுதி அளித்து, மாநகராட்சி சார்பாக, மக்களுக்கு மஞ்சப்பை கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றனர்.