• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

240 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் வாக்கு வாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல்

ByG. Anbalagan

Mar 17, 2025

பந்தலூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் 200 ரூபாய் மது பாட்டிலுக்கு 240 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மது பாட்டில் வழங்கப்படும் என வாடிக்கையாளரிடம்
டாஸ்மாக் கடை ஊழியர் மதுப்போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள அரசு மதுபான கடையில் வாடிக்கையாளர் ஒருவர் மதுபானம் வாங்க சென்றுள்ளார். அப்போது மதுபான கடையில் பணிபுரியும் ஊழியரிடம் வாடிக்கையாளர் 200 ரூபாய்க்கு மது பாட்டிலை கேட்டுள்ளார். அதற்கு டாஸ்மார்க் ஊழியர் 200 ரூபாய் மது பாட்டிலை 240 ரூபாய் என கூறியும், 240 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என வாடிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சடைந்த வாடிக்கையாளர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தும் 240 ரூபாய்க்கான ரசீது தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு டாஸ்மாக் ஊழியர் உங்களுக்கு மது பாட்டில் வேண்டுமா வேண்டாமா என கேட்டும் பின்னர் தட்டு தடுமாறி ஒரு வழியாக வாடிக்கையாளரிடம் 240 ரூபாய்க்கான ரசீதை கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மதுபான கடையில் இருந்த டாஸ்மாக் ஊழியர் மது போதையில் இருந்ததாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.