• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

யாசகம் பெற்று வந்த முதியவரை அடித்து கொலை செய்த நபர் கைது..

ByKalamegam Viswanathan

Mar 16, 2025

மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் காயம்பு 75 கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எல்லீஸ் நகர் பகுதியில் காவலாளியாக பணிபுரிந்தார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவிலில் பகுதியில் யாசகம் பெற்று சரவண பொய்கை பகுதியில் தஞ்சமடைந்தார்.

அதேபோல் சிவகங்கை மாவட்டம் ஈச்சனூர் பகுதியைச் சேர்ந்த பாக்கிய மகன் சங்கரலிங்கம் 50 சொந்த ஊரை விட்டு பிரிந்து திருப்பரங்குன்றம் பகுதியில் கூலிக்கு வேலைக்கு சென்று கொண்டு சரவணன் பொய்கையில் தங்கி இருந்தார். இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மது போதையில் வந்த சங்கரலிங்கம் முதியவர் காயபூவியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இந்த தகராறில் காயம்பூ கீழே விழுந்ததில் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில் அதிகாலையில் சரவணப் பொய்கைக்கு குளிக்க வந்த பொதுமக்கள் இவரை கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சட்டையில் ரத்த கரையுடன் சுற்றி திரிந்த சங்கரலிங்கத்தை போலீஸார் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.