• Wed. Apr 23rd, 2025

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு விழா

ByKalamegam Viswanathan

Mar 16, 2025

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. பெயர் பலகை திறந்து வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் என்ற எழுத்தில் பிழையாக இருந்தது. அதனை அமைச்சர் மூர்த்தியோ மாவட்ட ஆட்சியரோ மற்ற அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை.

பெயர் பலகை திறந்தவுடன் புதிதாக வழங்கப்பட்ட கால்நடை மருத்துவ வாகனத்தின் சாவி மாதிரியை ஒப்படைக்கச் சென்றார். தமிழை வளர்ப்பதாக கூறும் விடியா திமுகவினர் ஆளும் அரசின் அமைச்சர் தான் திறந்த பெயர் பலகையிலேயே உள்ள தவறை திருத்த முற்படவும் இல்லை. அங்கு இருந்த மற்ற அதிகாரிகளும் அதை கண்டு கொள்ளவில்லை என்பது வேதனையின் உச்சமாக இருந்தது . இனி வரும் காலங்களில் ஆவது இதுபோன்று தவறுகள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசி சென்றனர்.