புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவெப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 10ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
“புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதேசமயம், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை








