

அரிமளம் அருகே ஓணாங்குடியில் வேண்டி வந்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஓணாங்குடியில் வேண்டி வந்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இந்த மாட்டு வண்டி பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. மேலும் இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெரிய மாடு பிரிவில் எட்டு மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு பிரிவில் 35 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு போக வர எட்டு மயில் தூரமும், சிறிய மாட்டுக்கு போக வர ஆறு மைல் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பணமும், பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.


