• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள் புதுக்கோட்டையில் தர்ணா..,

ByS. SRIDHAR

Mar 12, 2026

​ ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி இன்று புதுக்கோட்டையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 8 முறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள் சங்கம் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தை அறிவித்தது.

அதன்படி, இன்று (மார்ச் 12) காலை புதுக்கோட்டை சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் முன்பு திரளான ஊழியர்கள் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“விலைவாசி விண்ணைத் தொடும் நிலையில், இந்த சொற்ப தொகை குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை” என்ற குமறலுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இன்று முதல் 2 நாட்கள் தொடர் தர்ணா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.