• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் திருநாள்

கத்தோலிக்க கிறித்தவ மக்கள், இறை இயேசுவின் பாடுகள் குறித்த தவக்காலம் இன்று(மார்ச்_5) துவங்கியதையடுத்து, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் திருநாள் திருப்பலியில் போது, ஆலயத்தின் பங்கு தந்தை கடந்த ஆண்டு குருத்தோலை திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கும் குருத்தோலை ஒவ்வொரு குடும்பத்திலும் பத்திரமாக பாதுகாப்பது தொன்று தொட்டு பின்பற்றப்படும் ஒரு அய்தீகம்.

சாம்பல் திருநாளின் முன் தினம் ஒவ்வொரு பங்குத்தளத்திலும், வீடுகளில் பாதுகாக்க பட்ட காய்ந்த ஓலைகளை பங்கு ஆலயத்தில் ஒப்படைக்கப்படும். அந்த ஓலைகளை எறிந்து எடுக்கப்படும் சாம்பலை தவக்கால திருப்பலியிலின் போது. குருவானவர் பக்த்தர்களின் நெற்றியில் “சிலுவை”குறி இடுவார்.

கோட்டாறு மறைமாவட்ட தலைமை தேவாலயம் ஆன கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் திருப்பலியில் மறை மாவட்ட ஆயர் முனைவர் நசரேன் சூசை பக்தர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார்.

வத்திக்கான் முதல் உலகப்பந்தில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் சாம்பல் தவக்கால முயற்சி பின்பற்றப்பட்டது.