• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஈரோடு இடைத்தேர்தல்… வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!

ByP.Kavitha Kumar

Jan 16, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஜனவரி 17) கடைசி நாள் ஆகும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 14-ம் தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானது.

இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ம் தேதி அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ம் தேதி விடுமுறை தினமாகும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன. நாம் தமிழ் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜனவரி 17 ) கடைசி நாள் ஆகும். தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

நாளை மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பிப்ரவரி 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.