• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னையில் 18-ம் தேதி திமுக சட்டத்துறை மாநில மாநாடு!

ByP.Kavitha Kumar

Jan 16, 2025

சென்னையில் திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு வருகிற 18-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது

மாநாட்டில் காலை 8.45 மணிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியேற்றுகிறார். மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். இரா.கிரிராஜன் எம்.பி முன்னிலை வகிக்கிறார். காலை 10 மணிக்கு ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ கலந்துரையாடல் நடைபெறுகிறது. மூத்த வக்கீல் கபில் சிபல் எம்.பி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் பேசுகிறார்கள்.

அதனை தொடர்ந்து நடக்கும் திராவிடவியல் கருத்தரங்கில் ஆ.ராசா எம்.பி., முனைவர் ஜெயரஞ்சன், பேராசிரியர் கருணானந்தன், மதிவதனி, மில்ட்டன், கவி கணேசன் ஆகியோர் பேசுகிறார்கள். ‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி மற்றும் அருள்மொழி, சூர்யா சேவியர், தமிழ் காமராசன், இந்திரகுமார் தேரடி, மருது கணேஷ் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாலை 4.30 மணிக்கு நடைபெறும். மாநாட்டு நிறைவு விழாவிற்கு சட்டத்துறை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னிலை வகிக்கிறார்.