• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

விற்பனைக்கு வரும் குறைந்த விலையில் ‘வலிமை’ சிமெண்ட்

Byமதி

Nov 16, 2021

தமிழக அரசின் டான்செம் நிறுவனம் குறைந்த விலையில் வலிமை என்ற பெயரில் விறபனைக்கு கொண்டுவரவுள்ள சிமெண்ட்டை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்துவைக்கவுள்ளார்.

வலிமை என்ற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமெண்ட் வெளி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புதிய சிமெண்ட்டை முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்யவுள்ளார். இந்த புதிய நடவடிக்கையின் மூலம் வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்டிடம் கட்டுவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.