• Wed. Nov 4th, 2026

புதுக்கோட்டையின் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கே எம் ஷெரீப் பரபரப்பு புகார்..,

Byமுகமதி

Nov 4, 2026

புதுக்கோட்டை சேர்ந்த கே எம் ஷெரீப் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்நிலையில் நேற்று பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்குவதற்காகவும் பேருந்து நிலையம் திறந்து வைப்பதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் வந்திருந்தார்.

அவரை சந்திப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தபோது எந்த வசதியும் இல்லாத ஓர் அறைக்குள் தன்னையும் இன்னும் சிலரையும் அடைத்து வைத்து மூன்று மணி நேரம் சிறுநீர் கழிக்க போக கூட அனுமதிக்காத நிலையில் அவதிப்பட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாடு முதலமைச்சரை முறைப்படி சந்திப்பதற்காக அனுமதி சீட்டு பெற்று நானும் எனது கட்சியின் மாவட்ட செயலாளர் யூசுப் ராஜாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரனும் இப்ராஹிம் பாபு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தோம். எங்களை சிறப்பு பட்டாலியன் பிரிவு எஸ் பி ஈஸ்வரனும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தை சாமியும் உங்களுக்கான இருக்கை வசதி செய்து தருகிறோம்,

அதுவரையில் ஓர் அறையில் உட்கார்ந்து இருங்கள் என்று சொல்லி எங்களை ஓர் அறையில் அடைத்து வைத்து அதற்குள் ஏற்கனவே அமர்ந்திருந்த சில அதிகாரிகளையும் சேர்த்து அமர வைத்து வெளியில் பூட்டு போட்டு பூட்டி விட்டார்கள்.
அதற்கு காரணம் என்னவென்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் பகுதியில் குறைகேடான வகையில் பல நிலங்களை பட்டா போட்டு கொடுத்து விட்டார். தமிழக அரசுக்கு நான் தான் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன். அதில் மாவட்ட நிர்வாகம் இலகுவாக உதவியாளர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இந்த மோசடி பட்டா மாறுதலுக்கு முழுமுதற் காரணம் மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட நிர்வாகமும் தான்.

இதை மனுவாக மீண்டும் தயாரித்து தமிழ்நாடு முதலமைச்சர் இடம் கொடுப்பதற்காக நாங்கள் வந்திருப்பதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் எங்களது மனுக்களை பறித்துக் கொண்டு இந்த அறைக்குள்ளே தள்ளி பூட்டி விட்டார்கள் என்பதுதான் உண்மை. இது வெளியில் வந்தது கொஞ்சம் தான் இது கிராமப் பகுதியில் மட்டுமல்லாது புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலேயே ஏராளமான இடங்கள் தவறான முறையில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது என்றார். அவருடன் மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.