• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நவம்பர் 14 குழந்தைகள் தினம், ரோஜாவின் ராஜா பிறந்த தினம்

Byவிஷா

Nov 14, 2021

ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும், சோகத்தை மறந்து புன்னகையில் ஆழ்த்துவதிலும் குழந்தைகள் பெரும் பங்கு வகித்துவருகின்றன. குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் குழந்தைகள் தினம்.

குழந்தைகள் நம் நாட்டின் பலம், சமூகத்தின் எதிர்காலம். இந்தக் குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் நாள் பன்னாட்டு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்கு காரணமானவர் குறித்து நாம் பார்ப்போம். 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தவர் பண்டித ஜவகர்லால் நேரு.
இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். நேருவின் பிறந்த நாள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர் ஆவார். குறிப்பாக பள்ளிகளில் காணப்படும் படங்களில் சட்டைப்பையில் ஒரு ரோஜாவுடன் சிரித்த முகத்துடன் காணப்படுவார் நேரு. மேலும் அவருக்கு ‘நேரு மாமா’ என்ற செல்லப்பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.