• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருவேடகம்சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா

ByN.Ravi

Jun 5, 2024

மதுரை மாவட்டம், திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில், 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை விக்னேஸ்வர பூஜையுடன் யாகவேள்வி தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, பூர்ணாகதி சதுர்வேத பாராயணம், நடைபெற்று மகா தீபாரதனையுடன் முதல் கால யாக பூஜை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து, 4ம் தேதி காலை 10 மணிக்கு மேல் இரண்டாவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி அளவில் கடம்
புறப்பாடாகி 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் மண்டபத்தில், பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.