• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள்

BySeenu

Apr 18, 2024

தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி கோவை மக்களை தொகுதியிலும் வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இந்த இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நம்பர் 20 கோவை மக்களவை தொகுதியில் 6 சட்டமன்றங்களில் 582 மையங்கள் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 225 பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 21 லட்சத்து 6ஆயிரத்து 124 பேர் உள்ளனர். மேலும் 1036 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 110 மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளனர்.