• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள்

ByP.Thangapandi

Apr 18, 2024

உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு ஏற்றி அனுப்பும் பணிகளை தேனி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.வி.ஷஜீவனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடி மையங்களுக்கும் 30 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டல வாரியாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆர்.வி.ஷஜீவனா நேரில் ஆய்வு மேற்கொண்டு தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.