• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

Byவிஷா

Mar 23, 2024

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதியில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிக வெற்றியை பெற்றுள்ளனர்.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 5 முறையும் வெற்றிக்கனியை பறித்து உள்ளன. இதில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் சமீபத்தில் பா.ஜனதா கட்சியில் இணைந்ததால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால்தான் விளவங்கோடு தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.
விளவங்கோடு தொகுதிக்கு ராணி என்பவரை வேட்பாளராக அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. 3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. சார்பில் வி.எஸ். நந்தினி விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.