விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாயில்பட்டி அருகே உள்ள இந்திரா நகரில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் கடந்த சில தினங்களாக வீணாக செல்கிறது.
இதனால் தாயில்பட்டி, வெற்றிலை யூரணி, சுப்பிரமணியபுரம், படந்தால், சாத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்யவும் தடையில்லாமல் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.