• Mon. Nov 16th, 2026

சாலை விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பலியான சம்பவம்..,

ByP.Thangapandi

Nov 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டியைச் சேர்ந்த அய்யர், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரராக 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.,

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர், இன்று நோட்டம்பட்டியிலிருந்து உசிலம்பட்டி இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் உசிலம்பட்டியிலிந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது குஞ்சாம்பட்டியில் உள்ள சாலை தடுப்பில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

மேலும் இவருக்கு கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் அங்கம்மாள் என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ள சூழலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,