• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

யூஎஸ்பி போர்டுகள் மூலம் சார்ஜ் போடாதீர்கள் – காவல்துறை எச்சரிக்கை

Byவிஷா

Mar 14, 2024

பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட்டால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பொதுமக்களின் தேவைக்காக செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலான மக்கள் பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
எனவே யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போடுவதை தவிர்த்து மக்கள், தாங்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.